ஈரானுக்கு ட்ரம்பின் புதிய எச்சரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் ‘ப்ராஜக்ட் ஃப்ரீட்ம ப்ளஸ்ஸை’ தொடங்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்கு ஈரான் விரைவில் பதிலளிக்கும் என நம்புவதாகவும் கூறினார். ஹோர்மூஸ் நீரிணையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

“சூழ்நிலையில் முன்னேற்றமில்லை என்றால் நாம் வெவ்வேறு வழிகளைக் கையாள வேண்டும். பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க ப்ராஜக்ட் ஃப்ரீடமை நிறுத்தப்பட்டது. பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்,” எந்றார்.