அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது கப்பல்களை விடுவிக்குமாறு, ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இர்வானி, செவ்வாய்க்கிழமை அன்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்குமாறும், அமெரிக்கா பறிமுதல் செய்துள்ள இரானிய வணிகக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களை உடனடியாக விடுவிக்குமாறும் இர்வானி வலியுறுத்தினார்.

ஈரானிய கப்பல்கள் பறிமுதல் செய்யப்படுவதை ‘கடற்கொள்ளை’ என்று இர்வானி விவரித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சர்வதேச சட்டத்தின்படி, இந்த அப்பட்டமான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க ஈரானுக்கு முழு உரிமை உண்டு” என்றும் இர்வானி கூறியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், ஈரானின் எண்ணெய் சேமிப்புத் திறன் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இது இரானின் எண்ணெய் விநியோகப் பாதைகளை சேதப்படுத்தும் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.