மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடரும்: நலிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடரும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்   நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் உள்நாட்டிலும் எண்ணெய் விலை சிறிதளவு அதிகரிக்கக்கூடும்.

அவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும், அது ஒட்டுமொத்த விலை உயர்வாக இருக்காது.

மேலும், விலையேற்றத்தின் பெரும்பகுதி செலவை திறைசேரியே ஏற்கும். இதனால், அதன் முழு சுமையும் பொதுமக்கள் மீது சுமத்தப்படாது.

போர்ச்சூழல் தணிந்த பிறகு, தற்போது நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணெய் விலையை குறைக்கவே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.