முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தனது சொத்துக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை (10) சமர்ப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தனது சொத்து விவர அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரிவித்திருந்தது.
அந்த 14 நாள் காலக்கெடு வெள்ளிக்கிழமை (10) முடிவடைந்தது.அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சொத்துக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவிக்கிறது.



