ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க அதிபர் உரையாடல்!

‘இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்கிறது’  என்று ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேர், விண்வெளியில் இதுவரை எந்த மனிதனும் செல்லாத, பூமியிலிருந்து தொலைதூர பகுதியை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், “நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் செய்வது போல் எதுவும் இல்லை. நிலவைச் சுற்றி வந்து, பூமியிலிருந்து மிகத் தொலைவான தூரத்திற்கான சாதனையை படைத்துள்ளீர்கள்,”  மனிதர்கள் இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை. இது மிகவும் சிறப்பானது” என்றார்.

மேலும் ஆர்டெமிஸ் குழுவுக்கும் நாசாவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்தத் திட்டம் முடிந்த பிறகு வெள்ளை மாளிகையில் ஆர்டெமிஸ் குழுவினரைச் சந்திப்பதாக ட்ரம்ப் கூறினார். அவர், “நானும் மிகவும் வேலையாக இருக்கிறேன், ஆனாலும் நேரம் ஒதுக்குவேன். அமெரிக்க மக்கள் சார்பாக, உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.