அமெரிக்க வான்படையின் நவீன விமானம் வீழ்ந்தது எப்படி? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரான் படையினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு ஒவ்வொரு போரில் எதிர்பாராத திருப்பங்களை ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்ற னர். வியாழக்கிழமை(19) இஸ்ரேலின் மிக முக்கிய எண் ணைசுத்திகரிப்பு நிலையத்தை ஹைபா பகுதியில் தாக்கிய பின்னர் அமெரிக்காவின் முன்னனி மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானம் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
அதாவது அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிப் படைகளை விட மிகவும் நேர்த்திய திட்டமிடப்பட்ட போரி யல் வியூகங்களைக் கொண்ட ஒரு போரை ஈரான் நடத்தி வருவதுபோலவே தோன்றுகின்றது. அது தற்போது தனது வான்பாதுகாப்புக்களை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மத்திய ஈரானின் வான்பரப்பில் பறந்துகொண் டிருந்த அமெரிக்க ஆயுதப் படைகளின் F-35 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானம் மீது ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை ஒரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, AD-08 என்றும் அழைக்கப்படும் மஜித் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பே இதற்குக் காரணம் என்று பல ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் அமெரிக்க – இஸ்ரேல் வான் படையினரின் உடனடியான வான் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தலாம். மேலும், ஈரானின் உட்பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்குதல்களைத் தொடுப்பதற்காக ஸ்டெல்த் விமானங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய முயற்சிகளை இது குறைக்கக்கூடும். தற்போதைய மோதலுக்கு அப்பால், சீனாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய போர் விமானத் திட்டமாக F-35 திட்டம் விளங்குவதால், இந்த விமானங்களில் ஒன்றின் மீது முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தப் பட்ட தரை-வான் தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகிறது.
இந்த தாக்குதல் இந்த விமானங்களின் பயன் பாடுகளில் பல திருத்தங்களுக்கு வழிவகுக்கும். உலகில் பல நாடுகள் இந்த விமானங்களை கொள்வனவு செய்ய எடுத்துவரும் முயற்சிகளையும் பாதிக்கும். ஏறத்தாள 20 நாடுகள் அதனை வாங்க திட்டமிட்டிருந்தன. இந்த விமானத் தின் வடிவமைப்புக்கு அமெரிக்க பெருமளவான நிதியை செலவிட்டிருந்தது.
இந்த விமானம் ரடார்களில் இருந்து தப்பும் ஸ்ரெல்த் தொழில்நுட்பம், இலத்திரனியல் சாதனங்களைக் குழப்பும் ஜாமர்கள், ஏவுகணைகளின் ரடார்களால் பின்தொடரப்பட்டால் அவற்றை உடைக்கும் தொழில்நுட்பம் மற்றும் போலியான தந்திரங்களைப் பயன்படுத்தி தப்பும் உத்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் உடைத்த ஈரானின் வலிமை பலரையும் வியக்க வைத்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமானி பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்காவின் மத்திய கட்டளைமையம் தெரிவித்திருந்தாரும், சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் MH-47G என்ற சினூக் வகை மீட்பு நடைவடிக்கை உலங்குவானூர்தி தொடர்ந்து வட்டமிட்டு தேடுதலை மேற்கொள்வதை பிளைற்ரடார் 24 என்ற நிறுவனம் காண்பித்துள்ளது. அதாவது வீழ்ந்த விமானத்தையும், விமானியையும் அது தேடுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது?
ஈரானின் ஆயத உற்பத்தி பிரிவால் மஜித் என்ற இலகுவில் நகர்த்தப்படும் குறுகிய தூர விமான எதிர்ப்பு ஏவுகணை 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நீண்ட பரப்பளவை பாதுகாப்பது அல்லாமல் குறிப்பிட்ட பிரதேசத்தை பாதுகாக்கும் வடிவில் வடிவமைக்கப்பட்டது. அதன் தாக்குதல் வீச்சு 700 கி.மீ மற்றும் 6 கி.மீ உயரத்திற்கு தாக்கக்கூடியது.
ரடார் வழிநடத்தல்களுக்கு பதிலாக அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்துவது அதன் பவனையின் வீச்சைக் கட்டுப்படுத்தினாலும், அது இந்த ஏவுகணைகளை ரடார் இல்லாமல் செயற்பட வைக்கின்றது. அது அதன் தப்பிப் பிழைக்கும் திறனை அதிகரித்துள்ளது. எப்-35 விமானத்தின் வெப்ப அடையாளத்தை விட அதன் ரடார் குறுக்குவெட்டுப் பரப்பு குறைப்புக்கள் கணிசமாக அதிகமாக இருப்பதால் அது அகச்சிவப்பு கதிர்களால் வழிநடத்தப்படும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாத பலவீனத்தை அந்த விமானத்திற்கு கொடுத்திருந்தது.
அகச்சிவப்புக் கதிகர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றுவதில் உள்ள மற்றுமொரு நன்மை என்னவெனில் மஜித் போன்ற ஏவுகணைகள் இலக்குகளின் ரடார் எச்சரிக்கை கருவிகளை ஏமாற்றிவிடும். அதேசமயம் அவற்றின் இலத்திரனியல் ஜாமிங் கூட சிறிய விளைவையே ஏற்படுத்தும். இந்த தாக்குதலின் காணொளியை ஈரானின் வான்எதிர்ப்புப் படை வெளியிட்டுள்ளது. அதில் அந்த விமா னத்திற்கு எதிராக ஒரே ஒரு ஏவுகணையே ஏவப்பட்டுள்ளது.
இது ஏவுகணையின் பற்றாக்குறையை காட்டுகின் றதா அல்லது அந்த செலுத்தியில் இருந்த ஏனைய ஏவுக ணைகள் வேறு இலக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த ஏவுகணையை ஏவினார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஏவுகணையினால் ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படையினரின் அதிக விலையுள்ள ஏறத்தாள 24 MQ-9 மற்றும் ஹெரோன் வகை ஆளில்லாத தாக்குதல் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருந் தது.
ஏவுகணைகளால் நன்கு பாதுகாக்கப்படும் எதிரி யின் வான்பரப்பினுள் ஆழஊடுருவி தாக்குதல் களை நடத்தும் நோக்த்துடனே எப்-35 விமானம் வடிவமைக் கப்பட்டிருந்தது. எனவே தான் இந்த நடைவடிக்கையில் அமெரிக்கா எப்-15 மற்றும் எப்-16 போன்ற நான்காம் தலை முறை விமானங்களை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது இடம்பெற்ற இந்த தாக்குதல் எதிர்வரும் காலங் களில் ஈரானின் கட்டளைத் தளபதிகள் மீதான இந்த விமானங்களின் தாக்குதல்களை கணிசமாக குறைக்கலாம்.
ஈரான் தனது குறுகிய தூர வான் பாதுகாப்புத் திறன்களை நவீனமயமாக்குவதில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கசிந்த ரஸ்யாவின் ஆவணங்களின் படி ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் 500 9K333 என்ற வெர்பா எனப்படும் தோளில் வைத்து இயக் கப்படும் குறுந்தூர தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைக செலுத்திகளையும் அதற்கான 2500 9M336 என்ற ஏவுகணைகளையும் 580 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தது.
வெர்பா, உலகின் மிகவும் திறன் வாய்ந்த மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது. மேலும், இது மூன்று நிறமாலை தேடுகருவியைக் கொண்ட அறியப்பட்ட ஒரே மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய அமைப்பாகும். இது நவீன எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தரமான மேன்மையை அளிக்கிறது. இவற்றில் புற ஊதா(IR), அண்மை அகச்சிவப்பு மற்றும் நடு அகச்சிவப்பு தேடுகருவிகள் அடங்கும். இந்த விநியோகங்கள்இ ஈரானின் வான்வெளியை குறைந்த உயரங்களில் ஊடுருவுவதற்கு மிகவும் சவாலான ஒன்றாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெர்பா அமைப்பானது, பின்னணி வெப்ப மூலங்கள், ஒளிக்கீற்றுகள் மற்றும் திசைசார் அகச்சிவப்பு எதிர் நடவடிக்கைகள் (DIRCM) ஆகியவற்றிலிருந்து இலக்குக ளைப் பிரித்தறியும் உயர் திறனைக் கொண்டிருக்குமாறு வடிவமைக்கப்பட்டது. போர் நடவடிக்கைகள் தொடர்ந்தால், ரஷ்யா இந்த அமைப்புகளை மேலும் வழங்குவதற்கான சாத்தியக்கூறு கணிசமாக உள்ளது, மேலும் அதற்கான பயிற்சிக்கான காலத் தேவைகளும் ஒப்பீட்டளவில் குறை வானதே.
F-35 விமானத்தின் ஒரு முக்கிய குறைபாடு என்ன வென்றால், பிளாக்-4 மென்பொருள் மேம்படுத்தல்களை முடிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள், அவற்றால் வான்-தரை ஏவுகணைகளை ஏவ இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இலக்குகளைத் தாக்குவதற்கு அவை அவற்றின் அருகில் பறக்க வேண்டியுள்ளது. இது மஜித் மற்றும் வெர்பா போன்ற குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதல்களுக்கு அவற்றை மேலும் எளிதில் இலக்காக்கு கிறது.
இதனிடையே குவைத்தில் உள்ள அலி அல் சல்லெம் வான்படைத்தளம் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குவைத் வான்படையின் 3 ஈயூரோபைற்றர்கள் எனப்படும் போர் விமானங்கள் அழிவ டைந்ததுடன், இத்தாலியின் இரண்டு ஈயூரோபைற்றர்கள் சேதமடைந்துள்ளதாக துருக்கியின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம், அமெரிக்கா இதுவரையில் 3 எப்-15 விமானங்களையும், ஒரு எப்-18 விமானத்தையும், 7 KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் இந்தப் போரில் இழந்துள்ளது. அதாவது வான்படையின் ஒட்டுமொத்த இழப்பு பில்லியன் டொலர்களாக இருக்கும் என கருதப்படுகின்றது.
இந்தப் போரின் போக்கைப் பொறுத்தவரையில் அமெரிக்கா வின் நிகழ்ச்சி நிரலைத் தாண்டி அது ஈரானின் கைக்குள் சென்றுவிட்டதாகவே தெரிகின்றது.