பாகிஸ்தானின் 86 ஆவது தேசிய தினம்: இலங்கையில் கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இணைந்து பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடின.

பாகிஸ்தானை ஒரு வலிமையான, துடிப்பான, முற்போக்கான, ஜனநாயக மற்றும் நலன்புரி அரசாக கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாடு இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் 2026 மார்ச் 23 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் செல்வி சுனைரா லத்தீப் (Zunaira Latif) பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட, அந்நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

துணைக்கண்டத்தின் முஸ்லிம் மக்களுக்காக தனி தாயகம் கோரி 1940 மார்ச் 23 அன்று லாகூரில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் விளைவாக, 1947 ஆகஸ்ட் 14 ஆம் திகதியன்று பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்தது.