ஈரான்,அமெரிக்க போரினால் பொருளாதார நெருக்கடி  வடகிழக்கு மக்களுக்கும் ஏற்படும்.!  : பா.அரியநேத்திரன்

கடந்த மாதம் 2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுடன் ஆரம் பமாகி தற்போதைய ஈரான் மோதல் தீவிரமடைந்து 15 நாட் கள் கடந்தும் தொடர்கிறது.
இலங்கை பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீண்டு வர வேண்­டிய  இந்த சூழலில் , இந்த போர்  இன் னும் நெருக்­க­டியை அதி­க­ ரித்துள்ளது. இவ்­வா­றான சூழலில் இதனை எதிர்­கொள்­வது சிக்­க­லா­னது. இத்­த­கைய நிலையில் மத்­திய கிழக்கில் போர் நிலை­மைகள் மோச­ம­டைந்து அங்­குள்ள 15 இலட்சம் இலங்கை தொழிலாளர்களை திருப்பி அழைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வளவு பேரையும் நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது கூட இலங்கையினால் இயலாத காரியமாகவே இருக்கும்.
மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற இலங்கையர் அனுப்புகின்ற பண வருவாய் குறைவதற்கான சாத்தியமுள் ளது. தொழில் இழப்புகளும் ஏற்படலாம்.  இது உள்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மத்தியகிழக்கில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களே அதிகளவில் தொழிலுக்காக சென்றுள்ளனர். ஈரான் நாட்டை பொறுத்தவரை கடந்த 2006ல் திருகோணமலை மாவி லாற்றில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் போர் ஆரம்பமாகி 2010 காலப்பகுதி வரை நடந்த இலங்கை உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மகிந் தராஷபக்‌ஷ தலைமையிலான இலங்கை அரசாங் கத்திற்கு பல வெளி நாடுகள் ஆதரவு வழங்கின. அவற்றில் ஈரான் வழங்கிய ஆதரவு இராணுவம், பொருளாதாரம் மற்றும் தூதரகம் ஆகிய மூன்று துறைகளிலும் காணப்பட்டதாக அப் போது கூறப்பட்டன.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழங்கிய அளவுக்கு பெரியதாக இல்லாவிட்டாலும், குறிப்பாக பொரு ளாதார மற்றும் எரிசக்தி உதவிகளில் முக்கிய பங்கை ஈரான் வகித்தது. இராணுவ மற்றும் பாதுகாப்பு ஆதரவு, ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உபகரணங்கள், 2007ஆம் ஆண்டு சுமார் 140 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தம் இலங்கை மற்றும் ஈரான் இடையே நடை பெற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கு முன்பும் 2000ம் ஆண்டின்  நடுப்பகுதியில் சுமார் 150 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகர ணங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன.  ஈரான், இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை வாங்க கடன் வசதிகளையும் வழங்கியது. இதன் மூலம்  கண்காணிப்பு விமானங்கள்,மனிதர் இல்லா விமானங்கள், போரின் இறுதி கட்டத்தில் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு திறனை அதிகரிக்க உதவின.இராணுவ பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, இலங்கை இராணுவ அதிகாரிகள் ஈரானில் பயிற்சி பெற்றதாக அப்போதைய தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக கடற்படை தொடர்பான சிறிய வேகப் படகுகள் பயன்படுத்தும் போர்த் தந்திரங்கள் போன்றவற்றில் ஒத்துழைப்பு இருந்ததாக அறியமுடிந்தது. ஈரான் வழங்கிய மிக முக்கியமான உதவி பொருளாதார மற்றும் எரிசக்தி துறையில் இருந்தது. எண்ணெய் வழங்கல், 2008ஆம் ஆண்டு மட்டும் சுமார் 1.05 பில்லியன் அமெரிக்க டொலர்மதிப்புள்ள கச்சா எண்ணெய் இலங்கைக்கு கடன் முறையில் வழங்கப்பட்டது. இது போரின் போது இலங்கை பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய உதவியது.
மொத்தத்தில் சுமார் 1.9 பில்லியன் டொலர் வரை கடன் வசதிகளை ஈரான் வழங்கியது. தற்போது ஈரானுக்கு எதிராக  மோதலைத் தொடரும் அமெரிக்கா,இஸ்ரேல், நாடுக ளும் இலங்கைக்கு இறுதிப் போரில் உதவியது என்பது உண்மை.
இலங்கை வடகிழக்கை பொறுத்தவரை தற்போது ஈரான், அமெரிக்கா மோதல்களால் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பது ஒருவிடயம். அடுத்ததாக ஐ நா மனித உரிமை பேரவையின் 61வது கூட்டத்தொடர் ஆரம்பமாகும் இவ்வேளையில் ஈழத் தமிழர்களுடைய விடயம் முக்கியத்துவம் பெறுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை வடகிழக்கு மக்களுடைய பொருளாதாரம், அரசியல் தீர்வு விடயங்களை கையாள்வதற்கான கூட்டு ஒற்றுமை இல்லை என்பதால் பெரும்பாலான தமிழ்த்தேசிய கட்சிகளின் குறியானது எப்படியும் வடமாகாணசபை தேர்தலிலும், கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் ஆசனங்களை எடுப்பதும் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கும் செயல்பாடுகளில் மட்டுமே கூடிய கவனம் செலுத்துகின்றது. தற்போதைய அநுர அரசு புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் என்ற பகல் கனவுடன் அதற்காக ஆளுக்கொரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதையும்  காணலாம்.
தற்போதைய ஈரான், அமெரிக்கா போர் மத்திய கிழக்கின் பதட்டம் அதுதொடர்பாக வடகிழக்கு மக்களுக்கான ஆலோசனை பொருளாதாரத்தை ஈடுசெய்யும் விதமான விழிப்பூட்டல்களை எந்த ஒரு கட்சிகளும் இதுவரை முன்எடுக்ககூடிய ஆயத்தங்கள் எதுவுமே செய்யக்கூடிய மனோநிலையில் இல்லை.
இலங்கையில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு இலங்கை அரசுதான் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப் பாட்டில் தான் சகல அரசியல் கட்சிகளும் உள்ளன என்பதே உண்மை. இலங்கை ஜனாதிபதியின் விசேட பொருளாதார குழு கூடி தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்திரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழி லாளர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் மற்றும் முதலீடு என்பவற்றிலே எரிபொருள் இறக்குமதி தங்கியுள்ளது. அதனால் இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுக ளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை மற்றும் அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
எதிர்கட்சி தலைவர் சஜித்தினால் அவசர இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்று. மத்தியகிழக்கில் ஏற்பட்ட போர் சூழல் தொடர்பாக ஆராயப்பட்டும் உள்ளது. ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சி தலைமைகள் இது தொடர்பாக எந்த அக்கறைகளையும் காட்டவில்லை என் பதே உண்மை.