ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், இது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ), காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’ (IRIS Dena) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே ஜெய்சங்கர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.



