‘இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி’ : அமெரிக்க தூதர் கருத்து

உலகம் முழுவதும் எண்ணெய் விலையில் சமநிலையைப் பராமரிக்க ‘இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி,” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“உலகம் முழுவதும் எண்ணெய் விலையைப் பராமரிப்பதில் இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி. ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதும் இந்த முயற்சியின் ஒரு பகுதி என அமெரிக்கா நம்புகிறது,” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது பதிவில், “உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் சுத்திகரிப்பாளர்களில் இந்தியாவும் ஒன்று. சந்தை நிலைத்தன்மையைப் பராமரிக்க அமெரிக்கா, இந்தியா இணைந்து பணியாற்றுவது முக்கியமானது.” என்றும் கூறினார்.

சமீபத்தில், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு 30 நாட்கள் விலக்கு அளித்திருந்தது அமெரிக்கா.