இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் – இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் தனது மூன்று கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்திய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய கடற்படை கப்பல் சேதமடைந்த சம்பவத்திற்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி, அலி கமெனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான் நகரில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் மேற்கு ஆசிய முழுவதும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



