யாழ்ப்பாணம், குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய பக்தர்களை மீட்கும் பணி தொடருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் படகில் பயணம் செய்த நிலையில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இதுவரை மூன்று பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு இன்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை பெரு விழா இடம்பெறவிருப்பதுடன் நாளை 07ஆம் திகதி சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ள மையும் குறிப்பிடத்தக்கது




