பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு இலக்கான ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஐ.எஸ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகித்து, அளுத்கம பகுதியை சேர்ந்த மொஹமட் மில்ஹான் என்பவரை கைது செய்ததன் ஊடாக, அவரின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு, அரசும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, மனுதாரர் மொஹமட் மில்ஹான் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
இருப்பினும், இந்த செயல்முறையின் ஊடாக மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

நீதியரசர்களான, அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய ஆயம், மனுதாரரின் கைதுக்கான, நியாயமான காரணத்தை சமர்ப்பிக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக அறிவித்துள்ளது.