வடகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் என்பது என்றைக்கும் இயற்கையின் உறைவிடமாக காணப் படுவதுடன் அங்கு இயற்கையினை மூலதனமாக கொண்டே தமது வாழ்வாதாரத்தினையும் பெருமளவானோர் கொண்டு செல்லும் நிலையில் அந்த இயற்கையே சிலவேளைகளில் வாழ்வாதாரத்திற்கு எதிரியாக மாறும் நிலைமையும் தொடர் ந்து இருந்துவருகின்றது.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் அண்மைக்காலமாக பெரும் அழிவுகளையும் இழப்புகளை யும் எதிர்கொண்டுவரும் மாகாணமாக இருப்பதுடன் அதிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ச்சியான பல்வேறு அழிவுகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டுவருகின்றது.
இயற்கையின் சீற்றம் ஒரு காரணமாயிருந்தாலும் யானை தாக்குதல்கள் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். ‘வண்டியிலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த’ கதையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச் சியான அழிவுகளை மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்கள்பபு மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்ததே இந்த அழிவுகளுக்கு காரணமாக அமைகின்றதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின் றன.
வெள்ளம், யானைகளின் தாக்கங்கள் என்பது அண்மைக்காலமாக பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவது டன் அவற்றின் மூலம் பல்வேறு இழப்புகளையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவருகின்றனர். குளங்களும் நீண்ட ஆறுகள்,வாவிகள்,நீர்நிலைகள் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுவரும் நிலை காணப்படும் அதேநேரம் இன்று யானையின் தாக்கங்கள் காரணமாக மட்டக்களப்பு நகரமும் ஆபத்தின் விளிம்பில் இருக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.
இது தொடர்பில் ஆராயும் வகையிலேயே இந்த கட்டுரையினை எழுதுவதற்கான முயற்சியை இந்த வாரம் முன்னெடுத்திருந்தேன்.மட்டக் களப்பு மாவட்டத்தின் இந்த நிலைமையினை ஓளரவுக்காவது மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை இதனைக்கொண்டு வலியுறுத்தும் வகையிலான செயற் பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
வெள்ள அனர்த்தம்
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் வெள்ள அனர்த்தம் என்பது 2020ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்த நிலைமையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாரிய நீர்பாசன குளங்களும் 400க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் இலங்கையின் மிக நீளமான வாவிகளில் ஒன்றாக கொண்ட வாவியையும் நீளமான ஆறுகளையும் கொண்ட மாவட்டமாகும்.ஆனாலும் மழைகாலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று இருந்துவருகின்றது.
கடந்தகாலத்தில் ஆட்சிசெய்தவர்கள் முறையான திட்டமிடல்களைக்கொண்டு வேலைத்திட்டங்களை முன் னெடுக்காமை இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகின்றது.அதனைவிட வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் நிலையிலும் முறையான வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகள் இல்லாமலும் நீர்வெளியேற்ற செயற்பாடுகள் இல்லாமலும் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அதிகளவில் வெள்ள அர்த்தங்கள் ஏற்படுவற்கான வாய்ப்புகளை ஏற் படுத்துவதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரை யில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் கடலினால் அடித்துவரப்பட்டு மட்டக்களப்பு வாவிக்குள் போடப்பட்டுள்ள பாரியளவிலான கட்டிட சிதைவுகள் மற்றும் கழிவுகளினால் மட்டக்களப்பு வாவியானது ஆழம் குறைந்த நிலையில் காணப்படுவதனால் மழைகாலங்களில் இலகுவில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்களாக இருப்பதுடன் இதன் காரணமாக வயல் நிலங்களும் அதிகளவில் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக மீனவர் களினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
சுனாமிக்கு முன்னர் பாரிய ஆழமான பகுதியாக வாவி காணப்பட்டது.கரையில் நின்றே நாங்கள் மீன் பிடித்தோம்.ஆனால் இன்று வாயின் ஒரு கரையிலிருந்து மற்றக்கரைக்கு நடந்துசெல்லக்கூடிய நிலையிருக்கின்றது.வாவி முழுவதும் கழிவுகளினால் நிரம்பியுள்ளது.அந்த கழிவுகள் அகற்றப்பட்டு வாவி ஆழப்படுத்தப்படுமானால் எதிர்காலத்தில் பாரிய வெள்ளப்பெருக்குகளை தவிர்க் கலாம் என மட்டக்களப்பு வாவியில் நீண்டகாலமாக மீன் பிடியில் ஈடுபடும் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோன்று வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டு புனர மைக்கப்படாத சிறுகுளங்கள் புனரமைக்கப்படுமானால் வெள்ளத்தினால் விவசாயதுறை பாதிக்கப்படுவது தவிர்க் கப்பட்டு நீண்டகால விவசாய நடவடிக்கைகளை முன் னெடுக்கமுடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காலம்காலமாக வரும் அரசுகள் வெறும் வாய்ப்பேச் சுகளில் மட்டுமே செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தமிழர்கள் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக தெரியப்படுத்தப்பட்டுவந்தபோதிலு ம் அவை கவனத்தில் கொள்ளப்படாமல் விடப்படுவதனால் மாவட்டம் இந்த நிலைமைக்கு செல்வதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் சுட்டிக்காட்டப்படு கின்றது.
குறிப்பாக முந்தனையாறு திட்டம் தொடர்பிலும் கித்துள் உறுகாமம் குளங்களை இணைத்து நீர்ப்பாசன திட்டத்தினை உருவாக்குவது குறித்து நீண்டகாலமாக பேசப்படுகின்றபோதிலும் இதுவரையில் யாரும் கவனத்தில் கொள்வதில்லை.இந்த அரசாங்கம் முந்தனையாறு திட்டத் தினை அமுல்படுத்தப்போவதாக கூறுகின்றது ஆனால் அது வெறும்வாய்ப்பேச்சா மட்டுமே இருக்கின்றது.கிபுல் ஓயா திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு காட்டும் அக்கரையில் ஒரு துளியேனும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகுறித்து காட்டப்படுவதில்லையெனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தொடரும் யானைகளின் அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் யானைகளில் ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்துவருகின்றது.இதுவரையி ல் படுவான்ரை பெரு நிலப்பரப்பில் ஊடுருவி சேதங்களை ஏற்படுத்தியுள்ள யானைகள் இன்று மட்டக்களப்பு நகருக்குள் வரும் நிலை மைகள் தோன்றியுள்ளது. யானைகளை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்படுவதாக தொடர்ச்சியாக மாறிமாறி வரும் அரசுகள் கூறிவந்தாலும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்பதே உண்மையாகும்.
இந்த கட்டுரை நான் எழுதிக்கொண்டிருக்கும் வெள்ளிக்கிழமை நாளில் இன்று அதிகாலை கொக் கட்டிச்சோலை, முனைக்காட்டு பகுதிக்குள் ஊடுறுவிய யானையினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப் பட்டிருந்த நிலையில் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மாத்திரம் யானையின் தாக்குதலினால் ஆறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம டைந்துள்ளதுடன் பெருமளவான வீடுகளும் சொத்துகளும் விவசாய பூமிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் தினமும் மாலை வேளைகளில் ஆண்கள் வீதிகளில் காவல் செய்யும் நிலைமையே இருந்துவருகின்றது.மட்டக் களப்பு நகருக்கு அருகில் உள்ள மாந்தீவு பகுதிகளில் குடிகொண்டிருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட யானைகள் மட்டக்களப்பு நகருக்கும் ஆபத்தாக மாறிவருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் உள்ள யானைகளே இவ்வாறு வந்து சேதங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கான காரணம் மட்டக்களப்பின் எல்லைப்பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளதனால் அங்குவரும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கிவருவதாக தெரி விக்கின்றனர்.
கடந்த காலத்தில் யானையின் வருகையினை கட்டுப்படுத்துவதற்கு முறையான யானை வேலிகள் அமைக் கப்படவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றபோதிலு ம் மாறிமாறி வரும் அரசுகள் அது தொடர்பில் முறையான கவனம் செலுத்தாமை யானையின் ஊடுருவலுக்குக் காரணமாக அமைவதாக பிரதேச அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதே பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இந்த மோதலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருவதுதான். இதன் விளைவாக காடுகளில் வாழும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், யானைகள் வருவது மட்டும் நிச்சயம். சமீபத்தில் வாழைச்சேனையில் ஏற்பட்ட சம்பவம் இதற்கு சான்றாகும்”எனவும் தெரிவிக்கின்றனர்.
தீர்வு
இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவேண்டுமானால் மக்களின் கருத்துகளும் இந்த பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மக்களின் கருத்துகளும் விவசாய சமூகங்களின் கருத்துகளும் துறைசார் நிபுணர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு முறையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.வெ றுமனே திட்டங்கள் முன்னெடுக்கின்றோம் நடைமுறைப்
படுத்துகின்றோம் என்ற போக்கில் கொண்டுவரும் நிதியை செலவிட மட்டும் திட்டங்கள் கொண்டுவரப்படுமானால் இதற்கான தீர்வினை வழங்கமுடியாது.
எவ்வாறாயினும்இந்த நாட்டில் உள்ள சிங்கள அரசுகள் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு செயற்படுமா என்ற சந்தேகங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.சர்வதேச ரீதியான நிதி அமைப்புகள் தன்னார்வ அமைப்பு கள் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.இதனை தடுப்பதற்கான வழிவகைகளை முன்னெடுத்து இந்த மாவட்டத்தின் துன்ப நிலையினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாகவும் இருக்கின்றது.



