இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.
ஈரானில் சுமார் 2,000 இலக்குகளைத் தாக்கியதுடன், 17 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அரபிக் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை அல்லது ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் தற்போது ஈரானின் ஒரு கப்பல் கூட பயணிக்கவில்லை எனவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.


