மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று இலங்கை அறிவித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றங்களைத் தணிக்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடுமையான மனிதாபிமான மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் பரந்த பிராந்திய மோதலின் அபாயத்தைத் தடுக்க அனைத்து தரப்பினரும் மேலும் நிலைமைகளை தீவிரமடையச் செய்யும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.



