‘ஈரான் அதி உயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்’: 40நாட்க்கள் துக்கம் அனுசரிப்பு

ஈரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து  அயதுல்லா அலி காமனெயி மரணத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் “முக்கிய போர் நடவடிக்கைகள்” குறித்து விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அரசுப் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் “தற்காப்புத் தாக்குதலை” நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல வாரங்களாக நீடித்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.