ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.