நாளை முதல் வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன்,  நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கைகள் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்கு வழங்காமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் திங்கட்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.