2024 நவம்பர் 14 பொதுத் தேர்தல் இடம்பெற்று 159 அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது 15 மாதங்கள் கடந்தும் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் சாக்கு போக்கு கூறி இழுத்தடித்து செயல்படுகிறது.
ஏற்கனவே 2024 செப்டம்பர் 21 ல் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரா கொடுத்த வாக்குறுதிக ளில் மாகாணசபை தேர்தலை தாம் ஆட்சியமைத்து ஒரு வருடத் திற்குள் நடத்துவோம் என்றார். இப்போது மாகாணசபை தேர்தலை பிற்போட காரணத்தைத் தேடும் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி உள்ளது.
ஆனால் என்றுமில்லாதவாறு சிங்கள எதிர்கட்சிகளாக உள்ள ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, மலையக கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர் அழுத்தங்களை அரசுக்கு கூறி சவால் விடும் நிலை தொடர்கிறது.
சிங்கள கட்சிகளுக்கு இருக்கிற பிரச்சினை மாகாணசபை தேர்தல் அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கை இல்லை தமது செல்வாக்கை தேர்தல் மூலம் பரீட்சித்து பார்க்கவே அவர்களுக்கு மாகாணசபை தேர்தல் தேவைப்படுகிறது.
தமிழ்தேசிய கட்சிகளுக்கும் அதிகாரப் பகிர்வு அவசியம் அதற்காக மாகாணசபை தேர்தலை நடத்துமாறு வெளியில் கூறினா லும் உண்மையில் அவர்களும் கதிரை ஆசை, முதலமைச்சர் ஆசை, பதவி ஆசை என்பதுவே மூல காரணமாகும்.
இப்போது வெளிநாட்டில் இருந்து எந்த இராஜதந்திரிகள் வந்தாலும் ஓட்டம் ஓட்டமாக அவர்களை சந்தித்து படம் எடுத்து ஊடகங்களுக்கு கொடுக்கும் தலைப்பு செய்திகள் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கோரிக் கைகள் மட்டுமே.
கடந்த 10/02/2026 ல் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பதவிகளை தக்க வைத்துள்ள இருவர் (சுமந்திரன், சாணக்கியன்) மாகாணசபையை உடனே நடத்த இலங்கை அரசை நிர்பந்திக்கும் கோரிக்கையினை முன்வைத்தனர்.
1949 தொடக்கம் 1976 வரையும் சமஷ்டி கேட்டு அகிம்சை போராட்டம் செய்த இனம். 1976 தொடக்கம் 2010 வரையும் தமிழீழம் கேட்டு ஆயுதப்போராட்டம் செய்த இனம். 2010 தொடக்கம் 2025 வரை யும் இனப்படுகொலைக்காக சர்வதேச நீதி கேட்டு போராடிய இனம். 2026 ல் மாகாணசபை தேர்தலை நடத்த இலங்கை அரசை நிர்பந்திக்க சர்வதேச இராஜதந்திரிகளை நாடவேண்டிய நிலை.
2017ல் நல்லாட்சியில் எதிர்கட்சியாக, எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பு செயல்பட்டு ஆளும் தரப்புக்கு ஆதரவு கொடுத்து இணக்கப்பாட்டு அரசியல் செய்த வேளையில் மாகாண சபை திருத்த சட்ட மூலம் மாகாணசபை தேர்தலுக்கு ஆப்பு வைக் கப்பட்டது.
இதனை அப்போது நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஷபக்ஷ கடந்த வாரம் (10/02/2026) இப்படி தெளிவாக கூறியிருந்தார். “மாகாணசபை தேர்தல் முறையில் மாற்றம் அடைந்து மாகாணசபை தேர்தல் தாமதம் அடைவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கி இருந்தன”. இது உண்மை 2017 ல் அந்த சட்டமூலத்தை எதிர்த்து அதனை நிறுத்தக் கூடிய பலம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இருந் தது அதனை செய்யவில்லை.
இப்போது மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் என கொக்கரிக்கும் எதிர்கட்சிகளான, ஐக்கியதேசிய கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, என்பன 2017 ல் வாய்மூடி மௌனமாக இருந்தவர்கள் இப்போது மாகாணசபை தேர்தலை முடிந்தால் நடத்துங்கள் என சவால் விடுகிறார்கள். அவர்கள் அதிகாரப்பரவாலக் கத்துக்காக அல்ல தமது செல்வாக்கை இந்த தேர்தலில் தக்க வைப் பதற்காகவே.
ஈழத்தமிழர் மக்களின் பரிதாப அரசியல் ஐரோப்பிய ஒன் றிய பிரதிநிதிகளிடம் பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறோ..? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறோ..? சர்வதேச நீதி தேவை என வலியுறுத்தாமலோ.? பௌத்தமயமாக்கல், தொல் பொருள், காணி விடுவிப்பு பற்றி விடயங்களைபற்றியோ.? காணா மால் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சர்வதேச நீதிபற்றியோ..?
இப்படியான விடயங்களை விட மாகாணசபை தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய பிரதிநிதிகளை நாடவேண்டிய வங்குறோத்து நிலையில்தான் தமிழ்தேசிய அரசியல் கடந்த 16 வருடங்களாக சென்றுள்ளது என்பதற்கு இதைவிட உதாரணங்கள் தேவையில்லை..! இலவு காத்த கிளி போன்று மாகாணசபை தேர் தலை எதிர்பார்க்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் நிலை பரிதாப அரசியலாக இன்று மாறிவிட்டது.



