மன்னாரில் இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

இச் சந்திப்பில் பேசிய பிரதமர், எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழவே விரும்புகின்றனர்.

ஆனால், சில இனவாத முகாம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றன.

அவர்களுக்குத் தேவை சாமானிய மக்களின் ஜனநாயகமோ அல்லது சட்டத்தின் ஆட்சியோ அல்ல, மாறாகத் தங்களின் அதிகாரம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தனது மன்னார் விஜயத்தின் போது திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.