கனடாவில் பள்ளி கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Tumbler Ridge Secondary School) 6 பேர் இறந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு நபர் உயிரிழந்தார்.
அதே சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு இடத்தில் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
காவல்துறை கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் மற்றொரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



