கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி

unnamed கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி

இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.

இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு “சிங்ககொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனக் கோசங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி இடம்பெற்றபோது A-09பிரதானவீதியின் ஒருபக்க வழித்தடத்தில்வீதிப் போக்கு வரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.