இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உடனடியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதற்குப் பதிலாக, அமெரிக்காவின் வலுசக்தி மற்றும் விவசாயப் பொருட்களை சுமார் 500 பில்லியன் டொலர் மதிப்பிற்கு வாங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
குறிப்பாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இனி ரஷ்யாவுக்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யவுள்ளது.
இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பிரதமர் மோடியை “காரியங்களைச் சாதிக்கும் சிறந்த நண்பர்” எனப் புகழ்ந்துள்ளார். 140 கோடி இந்திய மக்கள் சார்பில் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் இந்தியத் தயாரிப்புகளுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் பொருளாதார வலிமையை உறுதிப்படுத்தும் இந்த ஒப்பந்தம், இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


