ஈரான் மீதான தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தலையிட்ட பிறகு ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல் சில நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று வல்லா இராணுவ ஆய்வாளர் அமீர் போபோட் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை(15) ஈரானிய வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தெளிவான, தீர்க்கமான முடிவை வழங்கும் இராணுவ நடவடிக்கையை மட்டுமே தான் அங்கீகரிப்பதாக டிரம்ப் ஆலோசகர்களிடம் கூறியுள்ளார். அதேசமயம் தான் ஈரானை தாக்க விரும்ப வில்லை என்று டிரம்ப் ஈரானுக்குத் தெரிவித்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கான ஈரானின் தூதர் ரெசா அமிரி மொகதாம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடக நிறுவனமான டான் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை(14)  தனக்கு அந்தத் தகவல் கிடைத்ததாக ஈரானியத் தூதர் தெரிவித்தார், இது டிரம்ப் போரை விரும்பவில்லை என்பதையும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்க வேண் டாம் என்று ஈரானிடம் கேட்டுக் கொண்டதையும் குறிக்கிறது.
ஈரானில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்டப்பூர்வமான உரிமை இருப்பதாகவும், அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தாகவும் ஆனால் ஈரானில் ஆயுதமேந்திய குழுக்கள் கொலைகளை நடத்தியதோடு மசூதிகளையும் தாக்கிய தாகவும் தூதர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறையால் பலர் கொல் லப்பட்ட பின்னர் போராட்டங்கள் தணிந்துள்ளதாக தெஹ்ரானில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். “கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஏரா ளமானோர் கொல்லப்பட்டதால் போராட்டங்கள் அமை தியடைந்துள்ளன. அதனால்தான் மக்கள் வெளியே செல்லவில்லை,” என்று பெயர் வெளியிட விரும்பாத குடியிருப்பாளர் கூறினார்.
ஈரான் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும், அதில் 1,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் அடங்கு வர் என்றும் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.