2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists – IFJ) வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128 ஊடகவியலாளர்கள் ஊடக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக IFJ குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட 128 ஊடகவியலாளர்களில் 119 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்க்காலச் சூழலில் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆபிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா – பசுபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் 4 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் 533 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.



