இன்று புதன்கிழமை (31) மாலை நடைபெறவுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவவருமான பேகம் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
விஜித ஹேரத் இன்று புதன்கிழமை (31) ஸ்ரீலங்கன் UL 189 ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிற்கு பயணித்துள்ளார்.



