இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இரண்டு உயர்மட்ட ராஜதந்திரிகள் இலங்கை வருகை

இலங்கைக்கு இந்த வாரத்தில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இரண்டு உயர்மட்ட ராஜதந்திர பயணங்கள் இடம்பெறுகின்றன.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் உடனடி பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த பயணங்கள் அமைகின்றன.  இதன்படி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் செய்ய உள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும்போது ஜனாதிபதி உட்பட்ட அரசாங்க தரப்பினரையும் தமிழ் அரசியல்வாதிகளையும் சந்திப்பார்.  அத்துடன், டிட்வா சூறாவளிக்கு பின்னர் இந்தியாவின் உதவித்திட்டங்கள் குறித்து அறிவிப்பை அவர் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி, நாளை இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங்கைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தின் மூன்றாவது மிகச் சக்திவாய்ந்த தலைவராக ஜாவோ லெஜி கருதப்படுகிறார்.  அவரும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது