
தற்போது திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகள் பகுதியில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது தமிழர் வரலாற்றை அழிக்கவும் அதன் அடையாளத்தை நிரந்தரமாக மாற்றவும் நடக்கும் சதிவேலை.
நேற்று வரை நுழைவுச்சீட்டில் மட்டுமே “பௌத்த வளாகம்” எனக் குறிப்பிட்ட இலங்கையின் தொல்லியல் துறையினர் இன்று ஒரு புத்தர் சிலையையே நிலைநிறுத்தி உள்ளனர்.
இது திட்டமிட்ட வரலாற்று திரிப்பு.
கன்னியா என்பது தமிழ் பெரு மன்னன் இராவணன் மற்றும் தமிழ் மரபுகளுடன் தொடர்புடைய ஒரு தொன்மையான இடமாகும்.
தற்போது புத்தர் சிலையை நிலைநிறுத்தி இது ஓர் பௌத்த மத வளாகம் என்ற தோற்றத்தை வலுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் தமிழர் உரிமை கோரலை சட்டரீதியாக நீக்குவதற்கு எடுத்துள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளும் எந்த நடவடிக்கைளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



