இந்தோனீசியாவில் தீ விபத்து – 22 பேர் உயிரிழப்பு

இந்தோனீசியாவில் ஜகார்த்தா நகரில் உள்ள ஒரு அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், அதில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார்.

ஏழு மாடி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ மேல்நோக்கி பரவியதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.