டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகளை விலக ரஷ்யா வலியுறுத்தல்

மேற்கு  உக்ரைன் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இதனைப் பின்பற்றவில்லை என்றால், ரஷ்யா அந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிவித்தார் புதின். உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த ஒப்பந்தத்தையும் புதின் நிராகரித்துள்ளார்.

இந்தியா வந்தடைந்த பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் , “ஒன்று நாங்கள் இந்தப் பகுதிகளை படைகளைக் கொண்டு விடுதலை செய்வோம், அல்லது யுக்ரேன் படைகள் இங்கிருந்து விலகும்.” எனக் கூறினார்.

டான்பாஸின் 85% பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து விலக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்துவிட்டார்.