“ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைனின் புதிய தலைமை பேச்சுவார்த்தையாளரான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையில் அந்நாட்டு தூதுக்குழு கலந்து கொண்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்காக விட்காஃப் மாஸ்கோ செல்கிறார். உக்ரைனின் அதிபரின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளரான ஆண்ட்ரி யெர்மக் அவரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பின்னர், அவரது இடத்தில் உமெரோவ் சென்றுள்ளார்.



