தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று…

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின்  71ஆவது பிறந்தநாள் இன்று.

தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள  வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தாயகம்,தமிழ் நாடு,மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களாலும் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.