தோல்வியில் முடிந்த காலநிலை மாநாடு

Cope30 என அழைக்கப்படும் 2025 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு பிரேசிலின் வடக்கு நகரமான பெலெமில் முடிவடைய உள்ளதால், மசகு எண்ணை எரி பொருட்களின் எதிர்காலம் குறித்து நாடுகள் கடுமையாகப் பிளவு பட்டுள்ளன, இது பரஸ்பர குற்றச் சாட்டுகளில் முடிந்துள்ளது.
எரிபொருட்களிலிருந்து விலகுவதற்கான ஒரு திட்டத்தை உள்ளடக்காத-அல்லது எரி பொருள்
கள் என்ற வார்த்தையை குறிப் பிடாத ஒரு புதிய வரைவு திட்ட த்தை பிரேசில் வியாழக் கிழமை(20) விநியோகித்ததால், இரண்டு வார மாநாட்டில் பிரதிநிதிகள் ஒரு ஒப் பந்தத்தை எட்டத் தவறிவிட்டனர்.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு கடிதத்தில் கையெ ழுத்திட்டு, வரைவை கடுமையாகக் கண்டித்து, புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களிலிருந்து “நீதியான, ஒழுங்கான மற்றும் சமமான மாற் றத்தை செயல்படுத்துவதற்கான ஒரு வரை படத்தை உள்ளடக்காத ஒரு முடிவை ஆதரிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளன.
இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கான உறுதிப்பாடு துபாயில் Cope28 இன் ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்பட்டது. அப்போதும் கூட, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கடுமையான பரப்புரையின் மத்தியில் இந்த ஒப்பந்தம் “கட்டமாக வெளியேற” அழைப்பு விடுக்காமல் நின்றுவிட்டது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட Cope30 உரையின் முதல் வரைவில், அத்தகைய எரிபொருட்களிலிருந்து விலகி ஒரு திட்டத்தை உருவாக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இந்த திட்டத்தை நிராகரித்ததாக விவாதங்களை பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் 2023 இல் படிப்படியாக வெளியேற்றத்தை ஆதரித்த அமெரிக்கா – இந்த ஆண்டு மாநாட்டி ற்கு ஒரு குழுவை அனுப்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீண்ட கால மாக காலநிலை நெருக்கடி மற்றும் புவி வெப்ப மடைதலை ஒரு “புரளி” என்று சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட் டெரெஸ், மாநாடு “இடைவெளிக்கு” சென்று விட்டது என்றும், “மாற்றத்தைத் தடம் புரளச் செய்யும் நோக்கில் தவறான தகவல்களை நிவர்த்தி செய்ய” நாடுகளை வலியுறுத்தினார் என்றும் கூறினார்.