கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான்சானியாவில் வெடித்த அமைதியின்மையின் போது நூற் றுக்கணக்கானோர் கொல்லப்பட் டனர் மற்றும் தெரியாத எண்ணிக் கையிலானவர்கள் காய மடைந் தனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் செவ்வாயன்று(11) தெரிவித்துள்ளது.
“பாதுகாப்புப் படையினர் தெருக்களிலும் மருத்துவமனைகளி லும் இருந்து உடல்களை அகற்றி இனம்தெரியாத இடங்களுக்கு கொண்டு செல்வது ஆதாரங்களை மறைக்கும் முயற்சி என்ற தகவல்க ளும் உள்ளன” என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறினார்.
கொலைகள் குறித்து சுயா தீன விசாரணை நடத்த வேண்டும் என்றும், காணா மல் போன வர்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கொல்லப் பட்டவர்களின் உடல் களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரி களை வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 29 தேர்தலுக்குப் பிறகு தான் சானியா முழுவதும் வன் முறை போராட்டங்கள் வெடித்தன, அதில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் சுமார் 97% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.தேசத்துரோக குற்றச்சாட்டில் பல மாதங் களாக காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி சடேமா கட்சியின் தலைவர் துண்டு லிசு உட்பட ஹசனின் இரண்டு முக்கிய போட்டியாளர்களின் தகுதி நீக்கத்தால் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்ப மாகியிருந்தன.
தான்சானியாவின் 31 பிராந்தியங்களில் எட்டு இடங்களில் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு காவல்துறை மற்றும் அடையாளம் தெரியாத பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 1,000 பேர் பற்றிய அறிக்கைகளை கட்சி சேகரித் துள்ளதாக சடேமாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிடோகா கூறியதாகக் கூறப்படுகிறது. அரச அதிகாரிகள் இறப்புகளை ஒப்புக்கொண்டனர், ஆனால் எதிர்க்கட்சி புள்ளிவிவரங்களை மிகைப் படுத்தப்பட்டதாக நிராகரித்துள்ளனர்.



