இந்தியாவில் வெடித்துச் சிதறிய காவல் நிலையம்: 9 பேர் பலி, 25 பேர் காயம்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தினுள் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) நிபுணர்கள் போலீசாருடன் இணைந்து சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 9.பேர் உயிரிழந்துள்ளதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.