பல்கலைக்கழக 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய, பீடாதிபதி பதவிக்கு நியமிப்பதற்கு தகைமைகளுக்கு ஏற்புடைய வகையில் அளவுகோல்களை விரிவாக்கம் செய்வதன் மூலம் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் செயன்முறைக்கு இயலுமை கிடைக்கும்.
இத்திருத்தங்கள் மூலம் பல்கலைக்கழகங்களில் பிரதான கல்வி நிர்வாகப் பதவிகளுக்காக தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அதன்மூலம் நிறுவன நிர்வாகத்தைப் பலப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



