ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடுமையான போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து இப்பதவியை அவர் வென்றுள்ளார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

இன்நிலையில், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து சனே டகாய்ச்சி லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டதுடன் இதையடுத்து, அவர் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி வெற்றிபெற்ற அவர் விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.