ஏமனின் ஹவுத்திகள் குழுவின் மிக மூத்த இராணுவ அதிகாரி களில் ஒருவரான, முகமது அப்துல் கரீம் அல்-கமாரி, இஸ்ரேலின் தாக் குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை தாமே மேற் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ், அல்-கமாரி கடந்த வியாழக்கிழமை(16) தெரிவித்துள் ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுடனான மோதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் பதிலடி வழங்கப்படும் எனவும் ஹவுத்திகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம், தலைநகர் சனாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் அல்-கமாரி உட்பட குழுவின் மூத்த நபர்களை குறி வைத்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் அந்த தாக்குதலில் ஏமனின் பிரதமர் மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஒரு பலவீனமான போர் நிறுத்தம் ஏற்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு அல்-காமரியின் மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம், கிட்டத்தட்ட 68,000 பாலஸ்தீனியர்களைக் கொன்று, கடுமையான மனிதாபிமான நெருக் கடியைத் தூண்டிய காசா மீதான இஸ்ரேலின் இரண்டு ஆண்டு போரை நிறுத்தியுள்ளது. காசாவில் இனப்படுகொலையை நடத்தியதாக இஸ்ரேல் உரிமைகள் குழுக்களாலும் ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணையத்தாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.