பாகிஸ்தானும் ஆப்கானி ஸ்தானும் பல ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மோச மான எல்லை மோதல்களில் கடந்த வாரம் ஈடுபட்டதுடன், அங்கு பலர் கொல்லப்பட்டும், இரு தரப் பினரினதும் காவல் நிலைகள் கைப் பற்றப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேர போர் நிறுத்தம் புதன் கிழமை(15) நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாடும் மற்றொன்று போர் நிறுத்தத்தை கோரியதாகக் கூறுகின்றன.
பாகிஸ்தான் தாலிபான் (TTP) போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகி தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வரு கிறது, அதை காபூல் நிராகரிக்கிறது. புதன்கிழமை மாலை காபூலில் நடந்த இரண்டு வெடிப்புகள் நிகழந்துள்ளன. பாகிஸ்தான் படையினர் மேற் கொண்ட வான் தாக்குதல்கள் என்று கூறப்பட்டாலும், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்இஅதனை உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகள் தென்மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள இரண்டு முக்கிய எல்லைச் சாவடிகளைத் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரி வித்துள்ளது. இரண்டு தாக்குதல்களும் வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டன என்றும், ஆப் கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் அருகே சுமார் 20 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஆனால் 15 பொதுமக்கள் இறந்ததாகவும், 100 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் போராளிகளில் “இரண்டு முதல் மூன்று” பேர் கொல்லப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அதனை நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் தனது சமீபத்திய உயிரிழப்புகளை விவரிக்கவில்லை என்றாலும், கடந்த வாரம் நடந்த மோதல்களில் 23 வீரர்கள் கொல்லப்பட்டதை முன்னர் உறுதிப் படுத்தியிருந்தது. ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சி பத்திரிகையாளர் அப்துல் கஃபூர் அபித் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதும் இங்கு குறிப்பிடத்க்கது.