ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்து வந்த வீடியோக்கள் வானத்தில் அடர்த்தியான புகை மூட்டங்கள் வீசுவதைக் காட்டியது.
ஒரு வாரமாக நீடித்த தீவிர எல்லைச் சண்டையில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையிலும் 48 மணிநேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.