2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.
1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.
ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.
வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக உழைத்ததற்காக மரியா கொரினா மச்சாடோ கௌரவிக்கப்பட்டுள்ளார் என நோபல் குழு தெரிவித்துள்ளது.
மேலும் ”சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்தையும் அங்கீகரித்துள்ளது நோபல் குழு” என தெரிவித்துள்ளது