காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில்,
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்,”
“இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
“சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.