2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) ஆகியோர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூன்று பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் புறநோயெதிர்ப்பு (peripheral immune tolerance) தொடர்பான அடிப்படைக் கண்டுபிடிப்புகளுக்காக இப்பரிசைப் பெறுகின்றனர்.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூன்று பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக—குறிப்பாக, மாபெரும் குவாண்டம் இயந்திரக் கடத்தல் (macroscopic quantum mechanical tunnelling) மற்றும் மின்சுற்றில் ஆற்றல் அளவமைப்பு (energy quantisation)—இப்பரிசு மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.