அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத் தின் தமிழ் அகதிகளுக்கான சபை யின் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பக்குமார் மற்றும் செய்தித் தொடர்பாளர் ரேணுகா இன்பக் குமார் ஆகியோர் கடந்த வியாழக் கிழமை(2) பார்டன் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி அஸ்வினி “ஆஷ்” அம் பிஹை பஹார் அவர்களை சந்தித்தனர்.
இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசு தமிழ் ஈழத்திற்கு எதிராக நடத்திய இனப்படு கொலைக்கான வலுவான ஆதா ரங்களை அவர்கள்முன்வைத்தனர். திட்டமிட்ட வன்முறை, கட்டாயமாக காணாமல் போதல்கள், சித்திர வதை மற்றும் அடிப் படை உரிமை களை நசுக்குதல் ஆகியவற்றால் அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதை அடிக் கோடிட்டுக் காட்டியதுடன். காணாமல் போன அன்புக்குரியவர்கள் பற்றிய பதில்களுக்காக இன்னும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும் பங்களின் அவலநிலை மற்றும் உயிர் பிழைத்தவர்கள் மீது தொடர்ந்து மேற்கொள் ளப்படும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றை அவர் கள் விரிவாக கூறினர்.
அனைத்து தமிழ் அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரத் தேவைக்கான குறித்த காத்திரமான வாதத்தையும் அவர்கள் முன்வைத்தனர். அதனால் அவர்கள் மீண்டும் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு தள்ளப்படுவார்கள் என்ற அச்சத்திலிருந்து விடுபட்டு கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியும். இந்த சந்திப்பும் மற்றும் கலந்துரையாட லும் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்களிடையே தமிழ் சமூகத்தின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒரு முக்கிய மான படியைக் குறிக்கிறது.