பாலஸ்தீனப் பகுதிக்கு மிகப்பெரிய கடற்படை உதவிப் பணிகளில் ஒன்றாக உலகளாவிய கவனத்தை ஈர்த்த, காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைக்க முயன்ற குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல் தொகுதியில் உள்ள அனைத்து கப்பல்களையும் இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப் பாட்டில் எடுத்துள்ளன.
சுமார் 500 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற குறைந்தது 44 பொது மக்கள் படகுகளை உள்ள டக்கிய கப்பல் தொகுதியை புதன் கிழமை(1) இரவு இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது, அதில் இருந்த ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூட்டத்தைத் தடுக்கும் முயற்சிகள் வியாழக் கிழமையும்(2) தொடர்ந்தன.
இந்த கப்பல் தொகுதியில் இஸ்தான்புல், ஏதென்ஸ், பியூனஸ் அயர்ஸ், ரோம், பெர்லின் மற்றும் மாட்ரிட் உள்ளிட்ட உலகெங்கி லும் உள்ள நகரங்களில் உள்ள செயற்பாட்டாளர்கள் சென்றதால், அவர்களின் கைது உலகத் தலை வர் களிடமிருந்து விரைவான விமர் சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 500 பேர் கொண்ட இந்த குழுவில் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பெல் ஜியம், ஸ்பெயின், மலேசியா, துருக்கி மற்றும் கொலம்பியா உட்பட குறைந்தது 44 நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு ள்ளன.
பிரித்தானியா, குவைத்து, துருக்கி, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேற்ஸ், பலஸ்தீனம், பாகிஸ்தான், அமெரிக் தென்னாபிரிக்கா, இத் தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், கிறீஸ் உட்பட பல நாடுகளின் உலகத் தலைவர்களின் எதிர் வினைகள் மற்றும் வெளிப்படையான கண்டனங்கள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து வெளிவந்துள்ளன. இஸ்ரேல் தடுத்து வைக்கப் பட்டுள்ள தங்கள் குடிமக்களுக்கு தூதரக சேவை களை வழங்க வேண்டும் என்ற அழைப்பு கள் விடுக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், இந்த விடையத்தில் வெள்ளைமாளிகை தலையிட வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் அமெரிக்க அரசை கேட்டுள்ளனர்.