ரஷ்ய புற்றுநோய் நோயாளி களுக்கு வரும் மாதங்களில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூலம் சிகிச்சை அளிக்கப் பட உள்ளது என கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத் தின் தலைவர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.
புதிய தடுப்பூசி என்பது நோயாளியின் சொந்த மரபணு தகவல்களைப் பயன்படுத்தி வீரியம் மிக்க புற்றுநோய் கலங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச் சையாகும். செயற்கை நுண்ணறி வின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மெசஞ்சர் ஆர்என்ஏ (எம்ஆர்என்ஏ) தொழில் நுட்பம், தடுப்பூசியை ஒவ்வொரு நபரின் குறிப்பிட்ட புற்றுநோய் தன்மைக்கு ஏற்ப வடிவமைக்க உதவியுள்ளது, இது மிகவும் பயனுள்ள மற்றும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது.
“அனைத்து ஆவணங்களும் சிறிது காலத்திற்கு முன்பு சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் ஹெர்சன் நிறுவனம், ப்ளோகின் மையம் மற்றும் எங்கள் நிறுவனம் மெலனோமாவிற்கு எதிராக தனிப்பயனாக்கப்பட்ட முதல் தடுப்பூசி வகைக ளின் உற்பத்தியைத் தொடங்க விரைவில் ஒப்பு தல் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்”
நோயாளி குழுக்கள் ஏற்கனவே உருவாக் கப்பட்டு, அவர்களின் மரபணு தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் “ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள்” சிகிச்சை யைத் தொடங்கத் தயாராக உள்ளனர் என்று அவர் கடந்த புதன்கிழமை(24) தெரிவித்துள்ளார்.
புதிய புற்றுநோய் தடுப்பூசி முன் மருத்துவ பரிசோதனையின் போது அதிக செயல்திறனைக் காட்டியதாகவும், மருத்துவ பயன்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத் தில், ஃபெடரல் மெடிக்கல்-பயால ஜிகல் ஏஜெ ன்சியின் தலைவரான வெரோனிகாஸ் க்வோர்ட் சோவா தெரிவித்திருந் தார்.
ஹெர்சன் மாஸ்கோ ஆன்காலஜி ஆராய் ச்சி நிறுவனம் மற்றும் புளோகின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங் களிடம் இருந்து 60 மெலனோமா நோயாளிகள் தனிப்பயனாக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி யைப் பெறுவார்கள்.
ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் வி ஐ உருவாக்கியதன் மூலம் கம லேயா நிறுவனம் சர்வதேச அளவில் அறியப் பட்டிருந்தது. புதிய புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அதே எம்.ஆர்.என்.ஏதொ ழில் நுட்பத்தின் அடிப்படையில் எச்.ஐ.வி தடுப்பூசியிலும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.