வரவு செலவுத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிதிக் குறைப்புக்கான அரசாங் த் திட்டங்களை எதிர்த்துதொழிற் சங்கங்கள் வெகுஜன வேலை நிறுத் தங்களை ஆரம்பிக்கவுள்ளதால், பிரான்ஸ் நாடு தழுவிய நெருக்
கடிகளுக்குத் தயாராக உள்ளது.
வியாழக்கிழமை(18) ஆசிரியர்கள், சுகாதாரப் பணி யாளர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் நடத் திய வெளிநடப்பு, நாட்டின் சில பகுதிகளை முடக்கியிருந்தது, கடந்த ஆண்டு ஓய்வூதிய சீர்தி ருத்தம் மீதான கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மிகப் பெரிய அணிதிரட்டல்களில் ஒன் றாக இதனை தொழிற்சங்கங்கள் பார்க்கின்றன.
சிக்கனத் திட்டங்கள் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான மக்களின் கோபத்தை அதிகரித்துள்ள. சமீபத்திய பிரத மரின் மாற்றத்திற்குப் பிறகும், அரசுக்கு எதிரான நெருக்கடி குறை ந்து வருவதற் கான அறிகுறியைக் காணவில்லை, மாநிலத் தலைவரின் செல்வாக்கு களும் குறைந்து வருகின்றன.
மக்ரோனின் ஏழாவது பிரதமராக கடந்த வாரம் பதவியேற்ற முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு, ஒரு புதிய நடைமுறையை வகுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அது தொழிலாளர்களின் விரோதத்தை தணிக்கத் தவறிவிட்டது.
லெகோர்னுவின் முன்னோடியான பிராங் கோயிஸ் பேரூவால் கொண்டுவரப்பட்ட 44 பில்லியன் யூரோ ($52 பில்லியன்) சிக்கனத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து சீற்றத்துடன் உள்ளன. பிரதமர்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து வந்த சலுகைகளை ரத்து செய்வதற்கும், இரண்டு பொது விடு முறை நாட்களைக் குறைப்பதற்கான திட்ட த்தை கைவிடுவது என்ற லெகோர்னுவின் வாக்குறுதிகள் குறித்தும் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மக்ரோன் இன்னும் 18 மாதங்கள் ஆட்சியில் இருப்பார் ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள் ஆதரவு மதிப்பீடுகளை அவர் எதிர்கொள்கிறார்.