இந்த வார தொடக்கத்தில் சிறிய இமயமலை தேசமான நேபாளத்தை ‘ஜெனரல்-இசட்’ போராட்டங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(11) நேபாளம் நாடு தழுவிய ஊரட ங்கு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. தலைநகர் காத் மாண்டுவில், போராட்டக்காரர் கள் கட்டிடங்களுக்கு தீ வைத்த தால் அங்கு ஏற்பட்ட அமைதியின் மையைத் தடுக்க இராணுவம் நாட்டை தனது பொறுப்பில் எடுத்ததுடன், மக்களை வீட்டி லேயே இருக்குமாறு இராணுவம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், வன்முறை போராட்டங்களின் போது நேபாளத் தின் 77 மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில் இருந்து குறைந்தது 13,000 கைதிகள் தப்பியேபடியுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
அதேசமயம் போராட்டக் காரர்களின் பிரதிநிதிகள் காத் மாண்டுவில் உள்ள இராணுவ தலை மையகத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஒரு இடைக்காலத் தலைவரைப் பற்றி விவாதித் ததுடன், அவர்களில் சிலர் பிரபல முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (8) சமூக ஊடகங்கள் மீதான அரசின் குறுகிய கால தடையால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற் கொண்டிருந்தனர், அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்து அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்ப மாகியிருந்தன. வன்முறையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 25 ஐ எட்டியுள்ளது என்றும், 633 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கு இடம்பெற்ற போராட்டங்களின் போது மிகவும் பழமைவாய்ந்த அரண்மனை மற்றும் நாடாளுமன்ற கட்டிடம் என்பன உட்பட பெருமளவான அரசுச் சொத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன. போராட்டக்காரர்களின் இந்த நடவடிக்கையால் 5 பில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல் கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பிரதமர் உட்பட பெருமளவான அரசியல் வாதிகள் சிறப்பு படை உலங்குவார்திகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப் பட்டுள்ளனர்.