பதவி இழக்கும் இன்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி – அடுத்து சுந்தர் பிச்சையா?

இன்ரெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் சீனாவுடனான உறவுகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) கோரியுள் ளார். நிறுவனம் விற்பனை வீழ்ச் சியை சந்தித்தபோது, அதனை மீட்கும் முயற்சியாக மார்ச் மாதம் டான் அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றி ருந்தார்.
“தலைமை நிர்வாக அதிகாரி மிகவும் சர்ச்சைக்குரியவர், உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பிரச்சினைக்கு வேறு எந்த தீர்வும் இல்லை” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
குடியரசுக் கட்சி செனட்டர் டாம் காட்டன் புதன்கிழமை, இன்டெல் வாரியத் தலைவர் பிராங்க் யேரிக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, டிரம்பின் கோரிக்கை வந்துள்ளது. அவர், பெய்ஜிங்குடனான டானின் உறவுகள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார். டானின் நேர்மை மற்றும் சீன நிறுவனங்களில் அவர் முதலீடு செய்ததாகக் கூறப்படும் முதலீடுகளால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்து காட்டன் கேள்வி எழுப்பியுள்ளார் — சில முதலீடுகள் சீன மக்கள் இராணுவத்துடன் தொடர்புடையவை எனவும் கூறப்படுகிறது.
எனினும், டிரம்பின் இந்த கருத்துக்கு இன்டெல் மற்றும் டான் பதிலளிக்கவில்லை. டிரம்பின் பதிவிற்குப் பிறகு, இன்டெல் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% சரிந்தன, இருப்பினும் பின்னர் அதிகரித்துள்ளன.
வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இரு நாடுகளும் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி துறைகளில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது கடுமையான வரிகளை விதித்த பின்னர் அதனை கைவிட்டிருந்தார்.
இதனிடையே, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டவர்களை டிரம்ப் வெளியேற்றி வருவதால், அடுத்ததாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.